பா. ரஞ்சித் வழங்கும் 'ப்ளூ ஸ்டார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 5

22 May, 2023 | 12:17 PM
image

அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ப்ளூ ஸ்டார்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி அண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி, பாலாஜி, ராகவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். கணேசமூர்த்தி மற்றும் ஜி. சௌந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிலைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட்லுக்குடன் தற்போது சூழலுக்கு ஏற்ற வகையில் பாடல் ஒன்றையும் பட குழு பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்தப் பாடலில் தமிழகத்தின் வட பகுதியில் வாழும் இளைஞர்களுடைய துடுப்பாட்ட அனுபவமும், வாழ்வியலும் இடம்பெற்றிருப்பதால் பெரும் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் அப்புகுட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்'...

2025-01-17 15:33:58
news-image

பவன் கல்யாண் நடிக்கும் 'ஹர ஹர...

2025-01-17 15:32:15
news-image

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸஸ் &...

2025-01-17 15:31:55
news-image

சாதனை படைக்கும் அஜித் குமாரின் 'விடாமுயற்சி'...

2025-01-17 17:19:13
news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38
news-image

நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின்...

2025-01-16 17:03:46
news-image

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த விஜய் சேதுபதி...

2025-01-16 16:49:05
news-image

நடிகர் 'கெத்து' தினேஷ் நடிக்கும் 'கருப்பு...

2025-01-16 17:41:35
news-image

காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின்...

2025-01-16 16:45:44
news-image

கத்திக்குத்து தாக்குதல் ; நடிகர் சயிப்...

2025-01-16 16:49:31
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'காதி' படத்தின்...

2025-01-16 15:16:23