ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்கிறார் - ரோஹித அபேகுணவர்தன

Published By: Nanthini

21 May, 2023 | 09:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்கிறார். ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வெகுவிரைவில் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அரசியல் கொள்கையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்கிறார். குறுகிய காலத்துக்குள் நாடு வழமைக்கு திரும்பியுள்ளது. எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை யுகம் நிறைவு பெற்றுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் நாட்டுக்காக விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த வேளை அரசாங்கத்தை ஏற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பாராளுமன்றத்தில் உள்ள சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆசை; ஆனால் பயம் என்பதால் எவரும் தற்துணிவுடன் செயற்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையற்ற வகையில் அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வந்ததால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கினோம். பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு கண்டுள்ள பின்னணியில் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைய தயாராக உள்ளார்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:46:22
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46