யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இன்று (21) பகல் வீதியில் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியிலிருந்து விலகி, வயலுக்குள் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து, ஜே.சி.பி. (JCB) இயந்திரத்தின் மூலம் அப்பேருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே வயல்வெளிக்குள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, இந்த பேருந்து இன்று பயணிகள் சேவையில் ஈடுபட்டிராத நிலையில், பேருந்தில் சில இ.போ.ச. ஊழியர்கள் மாத்திரமே பயணித்திருந்தனர். இதனால், ஒருவருக்கும் ஆபத்தான நிலை நேரிடவில்லை என்றும் பேருந்தின் படிகள் மாத்திரம் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஜே.சி.பி. இயந்திரத்தின் துணையோடு பேருந்தை தூக்கி, இழுத்து வீதிக்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் காரணமாக சிறிது நேரம் பதற்றநிலையில் அப்பகுதி மக்கள் காணப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM