அனைத்து சிறந்த நோக்கங்களும் வெற்றியடையக் கூடிய வருடமாக அமையட்டும்

Published By: Robert

01 Jan, 2016 | 09:37 AM
image

பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டில் அனைத்து சிறந்த நோக்கங்களும் சிறப்பாக வெற்றியடையக் கூடிய வருடமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

2016 புது வருடமானது மக்கள் எதிர்பார்ப்புக்களை வெற்றியடையச் செய்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் ஒழுக்க நெறிமிக்க சமூக சூழ்நிலையொன்றினுள் நுழைவதற்கான விரிவான ஒரு சந்தர்ப்பத்தை இலங்கை சமூகத்துக்கு வழங்கும் வகையில் பிறக்கிறது.

அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்தரமான ஒரு சூழலில் புதுவருடத்தை வரவேற்கக் கிடைத்தமையானது நாம் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாகும்.

இன்று நம் முன்பே புதியதொரு அரசியல் கலாசாரம் காணப்படுகிறது. இது இன, மத, கட்சி பேதங்களை ஒதுக்கி தேசத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும்.

மனித கௌரவத்தைப் பாதுகாக்கும் நிலையான அபிவிருத்தியை அடைந்த ஒரு தேசமாக எமது நாட்டை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு புது வருடத்தில் எம் முன்பு உள்ள பாரிய சவாலாக காணப்படுகிறது.

பிறக்கும் புதுவருடத்தில் பொருளாதார சமூக, அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது எமது ஒரே நோக்கமாக காணப்படுவதோடு அதற்காக வேண்டி தற்போதைய அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று செயற்படுவதற்காக சாதகமான சிந்தனை கொண்ட அனைத்து மக்களும் ஒன்றிணைவர் என நம்புகிறேன்.

2016 ஆம் வருடமானது அனைத்து சிறந்த நோக்கங்களும் சிறப்பாக வெற்றியடையக்கூடிய வருடமாக அமையட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04