கனடிய தமிழர்கள் 7 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress - CTC) ஏற்பாடு செய்யப்பட்ட நிதிசேர் நடைபவனியூடாக திரட்டப்பட்ட நிதியின் இரண்டாவது நன்கொடை இதுவாகும்.
கடந்த ஆண்டு முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது.
கனடிய தமிழர் பேரவை தமது வருடாந்த நிதிசேர் நடைபவனியூடாக வருடந்தோறும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது.
இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவினால் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன.
இந்தச் சூழலை கருத்திற்கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022ஆம் ஆண்டு கனடிய தமிழர் பேரவையினரால் 14ஆவது வருடாந்த தமிழ் கனடிய நிதிசேர் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்குவதென திட்டமிடப்பட்டது.
இந்த நன்கொடையின் மூன்றாம் கட்டமாக கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட மூன்றாம் தொகுதி மருந்துப் பொருட்கள் கடந்த மே 17ஆம் திகதி புதன்கிழமை காலை 11 மணிக்கு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
கல்முனை ஆதார வைத்தியசாலை இயக்குநர் மருத்துவர் இராசரட்ணம் முரளீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதி மற்றும் மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் துரைரத்தினம், R. துசியந்தன், வைத்தியசாலை நிர்வாக பொறுப்பதிகாரி தேவஅருள் தோமஸ் மற்றும் பல மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் மாதங்களில் ஏனைய மருத்துவமனைகளுக்குமான நன்கெடைகள் திட்டமிட்டபடி, கனடிய தமிழர் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM