பிரெஞ்சு பகிரங்க டென்னிஸிலிருந்து நடப்புச் சம்பியன் நடால் விலகினார்

Published By: Sethu

21 May, 2023 | 11:07 AM
image

இவ்­வ­ருட பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் சுற்­றுப்­போட்­டி­யி­லி­ருந்து நடப்புச் சம்­பி­யான ரபாயெல் நடால் வில­கி­யுள்ளார். 

இடுப்பில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக இச்­சுற்­றுப்­போட்­டி­யி­லி­ருந்து தான் வில­கு­வ­தாக நடால் அறி­வித்­துள்ளார். அத்து­டன் தொழிற்சார் டென்னிஸ் போட்­டி­க­ளி­லி­ருந்து 2024 ஆம் ஆண்­டுடன் ஓய்வு பெறு­­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

36 வய­தான ஸ்பானிய வீர­ரான ரபாயெல் நடால், பிரெஞ்சு பகி­­ரங்கப் போட்­டி­களில் 14 தட­வை­கள் சம்­பி­ய­னாகி சாதனை படைத்­தவர்.

22 கிராண்ட்ஸ்லாம் சம்­பி­யன் பட்­டங்­களை வெற்­றுள்ள அவர், ஆகக்­கூ­டு­த­லான கிராண்ட்ஸ­்­­லாம் பட்­டங்­களை வென்ற வீரர்­கள் பட்­டி­யலில் சேர்­பி­யா­வின் நோவாக் ஜோகோ­விச்­சுடன் இணைந்து முதல் இடத்தில் உள்­ளார்.  

பிரெஞ்சுப் பகி­ரங்கப் போட்­டி­களில் 2005 ஆம் ஆண்டு அறி­மு­க­மாகி, தனது முதல் முயற்­சி­லேயே அச்­சுற்­றுப்­போட்­டியின் சம்­பியன் பட்­டத்தை வென்­றவர் நடால். களிமண் தரை போட்­டி­களின் ஜாம்­ப­வா­னான ரபாயெல் நடால், பிரெஞ்சுப் பகி­ரங்க  சுற்­றுப­்­­­போட்­டி­யி­லி­ருந்த வில­கு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

'இது நான் மேற்­கொண்ட தீர்­மா­ன­மல்ல, இது எனது உடலின் தீர்­மானம்' என தனது சொந்த ஊரான மனகோவில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் நடால் கூறினார்.

சில மாதங்கள் தான் ஓய்வு பெற­வுள்­ ள­தாக நடால் கூறினார். இதன்­படி, அவர் எதிர்­வரும் விம்­பிள்டன் ‍போட்டிகளில் பங்குபற்றமாட்டார். பெரும்பாலும் அமெரிக்கப் பகிரங்கப் போட்டி­களிலும் பங்குபற்றமாட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41