ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்லும் 4ஆவது அணி எது? : பெங்களூர், ராஜஸ்தான், மும்பைக்கு இடையில் கடும் போட்டி!

Published By: Nanthini

21 May, 2023 | 09:44 AM
image

(நெவில் அன்தனி)

நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ், முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகளுடன் ஐ.பி.எல். 2023 ப்ளே ஓவ் சுற்றில் இணையவுள்ள கடைசி அணியை தீர்மானிக்கும் 2 முக்கிய போட்டிகள் இன்று (21) நடைபெறவுள்ளன.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், அங்குரார்ப்பண ஐ.பி.எல். சம்பியன் ராஜஸ்தான் றோயல்ஸ், 5 தடவைகள் சம்பியனான மும்பை இண்டியன்ஸ் ஆகிய நான்கு அணிகளும் தலா 14 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

ஆனால், நிகர ஓட்ட வேக அடிப்படையில், அந்த மூன்று அணிகளும் முறையே 4ஆம், 5ஆம், 6ஆம் இடங்களில் இருக்கின்றன.

ராஜஸ்தான் றோயல்ஸ் தனது போட்டிகளை நிறைவு செய்துள்ளதுடன் றோயல் செலஞ்சர்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா ஒரு போட்டி எஞ்சியுள்ளது.

பெங்களூரும் மும்பையும் வெற்றிபெற்றால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 4ஆம் இடத்தைப் பெறும் அணி ப்ளே ஓவ் சுற்றுக்கு தெரிவாகும். ஒருவேளை இந்த இரண்டு அணிகளும் மோசமான தோல்விகளைத் தழுவினால் ராஜஸ்தான் றோயல்ஸ் ப்ளே ஓவ் சுற்றுக்கு முன்னேறும்.

மும்பை இண்டியன்ஸ் தனது சொந்த மைதானமான வான்கடேயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்தாடவுள்ளதுடன், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் தனது சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸை சந்திக்கவுள்ளது.

மும்பை இண்டியன்ஸும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரும் வெற்றிபெற்றால் 16 புள்ளிகளைப் பெறும். ஆனால், நிகர ஓட்டவேக அடிப்படையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ப்ளே ஓவ் வாய்ப்பை பெறும்.

றோயல் செலஞ்சர்ஸ் ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றாலும் கூட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை குறைந்தது 79 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டால் மும்பை இண்டியன்ஸுக்கு ப்ளே ஓவ் வாய்ப்பு கிடைக்கும்.

எவ்வாறாயினும், மும்பை மிகப் பெரிய வெற்றியை ஈட்டினாலும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் கடைசிப் போட்டியில் விளையாடுவதால் அவ்வணிக்கு எத்தகைய வெற்றி போதுமானது என்பதை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இது பெங்களூருக்கு சாதகமாக அமையும்.

இந்த இரண்டு அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகளில் முடிவு கிடைக்காவிட்டால், நிகர ஓட்ட வேக அடிப்படையில் ப்ளே ஓவ் சுற்றுக்கு பெங்களூர் செல்லும்.

மும்பை - சன்ரைசர்ஸ் போட்டியில் முடிவு கிடைக்காமல் குஜராத்துடனான போட்டியில் பெங்களூர் வெற்றிபெற்றால், பெங்களூர் ப்ளே ஓவுக்கு முன்னேறும்.

குஜராத் - பெங்களூர் போட்டியில் முடிவு கிடைக்காமல் மும்பை வெற்றிபெற்றால் அவ்வணி ப்ளே ஓவ் வாய்ப்பைப் பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52
news-image

பங்களாதேஷுடனான ரி20 தொடரில் அசலன்க தலைவராகிறார்

2024-02-27 12:52:21
news-image

டிசம்பரில் அங்குரார்ப்பண லங்கா ரி10 லீக்...

2024-02-26 21:34:26
news-image

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்டில் 5 விக்கெட்களால்...

2024-02-26 17:08:28
news-image

ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் 2024 மோட்டார்...

2024-02-26 13:50:22
news-image

மும்பை இண்டியன்ஸுக்கு இரண்டாவது வெற்றி

2024-02-26 12:02:40
news-image

நுவரெலியா குதிரை பந்தய திடலில் இடம்பெற்ற...

2024-02-26 01:52:13
news-image

இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு மேலும்...

2024-02-25 22:17:21