சென்னையை ப்ளே ஓவ் சுற்றுக்குள் : துடுப்பாட்டத்தில் கொன்வே, கய்க்வாட், பந்துவீச்சில் மதீஷ, மஹீஷ் பிரமாதம்

21 May, 2023 | 07:25 AM
image

(நெவில் அன்தனி)

புதுடில்லியில் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெவன் கொன்வேயும் ருத்துராஜ் கய்க்வாடும் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் டெல்ஹி கெப்பிட்டல்ஸை 77 ஓட்டங்களால் வெற்றிகொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 2ஆவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழைந்தது.

நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் சில தினங்களுக்கு முன்னர் ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகதிபெற்றிருந்தது.

இலங்கை பந்துவீச்சாளர்களான மதீஷ பத்திரண, மஹீஷ தீக்ஷன ஆகிய இருவரும் பிரம்மாதமாக பந்துவீசி தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைக் குவித்தது.

நியூஸிலாந்தின் இடதுகை துடுப்பாட்ட வீரர் டெவன் கொன்வேயும் ருத்துராஜ் கய்க்வாடும் 141 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கொன்வே 52 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 87 ஓட்டங்களையும் கய்க்வாட் 50 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 79 ஓட்டங்களையும் குவித்தனர்.

ஷிவம் டுபே 9 பந்துகளில் 22 ஓட்டங்களையும் ரவீந்த்ர ஜடேஜா 7 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

அணித் தலைவர் எம்.எஸ். தோனி 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

சென்னையினால் நிர்ணயிக்கப்பட்ட 224 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஒரு புறத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க மறுபக்கத்தில் அபார திறமையை வெளிப்படுத்திய அணித் தலைவர் டேவிட் வோர்னர் 58 பந்துகளில் 7 பவுண்டறிகள்,  5 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைக் குவித்தார்.

ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் யாஷ் துல் (13), அக்சார் பட்டேல் (15) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

சென்னை பந்துவீச்சில் தீப்பக் சஹார் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52
news-image

பங்களாதேஷுடனான ரி20 தொடரில் அசலன்க தலைவராகிறார்

2024-02-27 12:52:21
news-image

டிசம்பரில் அங்குரார்ப்பண லங்கா ரி10 லீக்...

2024-02-26 21:34:26
news-image

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்டில் 5 விக்கெட்களால்...

2024-02-26 17:08:28
news-image

ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் 2024 மோட்டார்...

2024-02-26 13:50:22
news-image

மும்பை இண்டியன்ஸுக்கு இரண்டாவது வெற்றி

2024-02-26 12:02:40
news-image

நுவரெலியா குதிரை பந்தய திடலில் இடம்பெற்ற...

2024-02-26 01:52:13
news-image

இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு மேலும்...

2024-02-25 22:17:21