(ஆர்.ராம்)
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மற்றும் கட்சிக்கு களங்கம் வகிக்கும் வகையில் பொதுவெளியில் செயற்பட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் சம்பந்தமாக ஒழுக்காற்றுக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக, கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின்போது 24 பேர் தமிழரசு கட்சியின் அங்கத்துவத்திலிருந்து வெளியேறியிருக்கின்றார்கள். சில இடங்களில் முன்மொழியப்பட்ட உறுப்பினர்களுக்கு அங்கத்துவம் வழங்கப்படவில்லை.
இந்த விடயம் சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சம்பந்தனும் தனது விருப்பினை தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுமந்திரன், தவராசா ஆகியோரது விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.
இலங்கை தமிழரசு கட்சியின் ஒழுக்காற்றுக்குழுவின் தலைவராக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM