கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான சுவாசிக்கும் நுட்பங்களைப் பற்றி வழிகாட்டுவது மிகவும் அவசியம். இந்த சுவாசிக்கும் நுட்பங்கள் பிரசவவலியின்போதும், பிரசவத்தை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கும் உதவுவது மட்டுமல்லாமல், கர்ப்பகாலம் முழுவதும் மன அழுத்தம், பதற்றத்தை நிர்வகிப்பதற்கும் உதவுகின்றன.
ஒரு ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கும், எளிதாகப் பிரசவம் ஆவதற்கும், தாய் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் ஆரோக்கியமாகவும், அமைதியான மனநிலையுடனும் இருக்க வேண்டும். இதற்கு கர்ப்பிணிப் பெண்கள் மற்ற விஷயங்களுடன், பின்பற்ற வேண்டிய சில சுவாசிக்கும் நுட்பங்களும் உள்ளன.
ஆழ்ந்த சுவாசம் அல்லது தளர்வான சுவாசம் என்று அழைக்கப்படும் சுவாசிக்கும் நுட்பத்தில் சுவாசத்தை மெதுவாகவும் ஆழமாகவும் மூக்கின் வழியாக உள்ளே இழுத்து வாய் வழியாக வெளியேற்றுவதை உள்ளடக்கியது. இந்த சுவாச முறை உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது, மன அழுத்தம் – பதற்றத்தையும் குறைக்கும். இந்த காலத்தில் அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய சுவாசிக்கும் நுட்பங்கள்
*4-7-8 சுவாசிக்கும் நுட்பம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பிரபலமான சுவாசிக்கும் நுட்பங்களில் ஒன்று ‘4-7-8’. இந்த முறையானது 4 விநாடிகள் மூச்சை உள்ளிழுத்து, 7 விநாடிகள் வரை நுரையீரலில் வைத்திருந்து, பின்னர் 8 விநாடிகளுக்கு மூச்சை வெளியேற்ற வேண்டும். உடலும் மனமும் மிகவும் ஆசுவாசமாக உணரும் வரை, இந்த முறையை பல நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இந்த நுட்பத்தை எங்கும், எந்த நேரத்திலும் செய்யலாம். இது கர்ப்பிணிப் பெண்களுக்கு நாள் முழுவதும் பயன்படுத்த வசதியான ஒரு முறை.
*மெதுவாக சுவாசிக்கும் நுட்பம்: பிரசவ வலியின்போதும் பிரசவம் நடைபெறும்போதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு சுவாச நுட்பம் ‘மெதுவாக மூச்சு விடுதல்’ நுட்பமாகும். மூக்கு வழியாக மெதுவாக, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, வாய் வழியாக வெளியேவிட வேண்டும். சுவாசத்தை நீட்டிப்பதில் கவனம் செலுத்துவதும் இதில் அடங்கும். இந்த நுட்பம் பெண்களுக்கு பிரசவத்துக்கு முந்தைய வலி, பிரசவிக்கும்போது ஏற்படும் வலி, பதற்றத்தை தணிக்க உதவும்.
*சுவாசிப்பதில் கவனம் செலுத்தும் சுவாச நுட்பம்: சுவாசிப்பதில் கவனம் செலுத்தும் சுவாச நுட்ப உத்தி என்பது சுவாசத்தில் கவனம் செலுத்துவதையும், கவனச்சிதறல்களிலிருந்து மனதை விலக்க ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது. கர்ப்பகாலத்தில் அதிக மனம் சார்ந்த, உணர்ச்சிகள் சார்ந்த அழுத்தத்தை அனுபவிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நுட்பம் உதவியாக இருக்கும்.
பிரசவ வலியின்போது பின்பற்ற வேண்டிய சில சுவாச நுட்பங்கள் உள்ளன, அவை:
*தளர்வான, தாளலய சுவாசம்: பிரசவ வலி நேரத்தில் சுருங்குவதால் (contraction) வலி ஏற்படுவதற்கு முன், ஆழமாக சில முறை சுவாசித்து பின்னர் ஓய்வெடுக்கவும். இது பிரசவ வலியைக் குறைக்கவும், தசை இறுக்கம் – உடல் வலியைத் தளர்த்தவும், ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கவும் உதவும்.
*எண்ணிக்கை சுவாசம்: சுருக்கத்தால் ஏற்படும் வலியின்போது (contraction), மூச்சுவிடுவதை எண்ணுவது இதய துடிப்பு, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஒவ்வொரு சுவாசத்தின் போதும் உங்கள் உடலையும் மனதையும் தளர்த்த உதவுகிறது.
*வாய்வழி சுவாசம்: வாய், மூக்கு வழியாக சுவாசிக்க வேண்டும். முதலில் உடலைத் தளர்த்தவும், சில முறை சுவாசத்தை உள்ளிழுத்து, திரும்ப வெளியே விடாமல் வைத்திருக்கவும், பிறகு வெளியே விடவும். இதைத் தொடர்ந்து ஓரிரு முறை செய்ய வேண்டும்.இந்த சுவாசிக்கும் நுட்பங்களைச் செய்யும்போது கணவரின் உதவி ஆதரவாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இது தாய்மார்களை நிதானமாக உணரவைக்கிறது. பிரசவத்தின்போது வலியைக் குறைக்க உதவுகிறது.
அவர்கள் நல்ல மனநிலையில் இருக்க உதவுகிறது. பிரசவத்தின்போது பெண்கள் சில தடைகளை எதிர்கொள்ளலாம். அந்த தடைகளை சமாளிக்க சுவாசிக்கும் நுட்பங்கள் ஒரு நல்ல வழி. நல்ல மனநிலைக்கு திரும்பவும் அது உதவுகிறது. பிரசவத்தின்போது பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், முதலில் உடலைத் தளர்த்தி, பிறகு சுவாசத்தைத் தொடர வேண்டும். இது சுவாசத்தை மீண்டும் பெற உதவுகிறது, பிரசவவலியின் சீரான தன்மைக்கும் உதவுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM