(லியோ நிரோஷ தர்ஷன்)

ஓமந்தையில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றப்பட்டு விட்டதாகவும் அங்கிருந்த படையினர் கொழும்பிற்கு அழைக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த இராணுவ முகாம் தொடர்ந்தும் அந்த பகுதியில் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.