ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

Published By: Ponmalar

20 May, 2023 | 01:59 PM
image

*பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலை. மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரத சத்து அதிகம். இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலைக்கு உண்டு. நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் என்பதால், கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

*நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைந்துள்ளது. இது நாம் உண்ணும் உணவில் இருந்து கல்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.

*நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

*உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் உள்ள சத்து இதய வால்வுகளை பாதுகாத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

*நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற அன்டி ஆக்சிடென்ட், நோய் வராமல் தடுப்பதுடன், இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

*மூளை வளர்ச்சிக்கு நல்ல டொனிக். இதில் உள்ள விட்டமின் 3 நியாசின் ஞாபக சக்திக்கு பெரிதும்  பயனளிக்கிறது.

*பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் மூளையை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இது மன அழுத்தத்தைப் போக்குகிறது.

*தாமிரம் மற்றும் துத்தநாகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள ஒமேகா-3 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*பெண்களின் ஹோர்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், பொஸ்பரஸ், கல்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. 

*பாதாம், பிஸ்தா, முந்திரியினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதில் அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் வலிப்பு நோய்!

2023-05-31 11:39:46
news-image

வெப்ப பக்கவாத பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

2023-05-30 12:26:34
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-27 14:02:39
news-image

வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2023-05-26 18:10:38
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-05-26 12:25:04
news-image

சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-24 15:50:08
news-image

தொடையின் பின்பகுதியில் ஏற்படும் வலிக்கான நிவாரண...

2023-05-23 11:07:06
news-image

கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!

2023-05-20 19:53:27
news-image

சின்னம்மை (Chicken Pox)

2023-05-20 19:55:40
news-image

ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

2023-05-20 13:59:49
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7...

2023-05-20 14:00:24
news-image

காது… மூக்கு… தொண்டை… பிரச்சினைகள்

2023-05-19 14:36:24