ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து பஞ்சாபை வெளியேற்றியது ராஜஸ்தான்

Published By: Nanthini

20 May, 2023 | 10:20 AM
image

(நெவில் அன்தனி)

தரம்சாலாவில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஷிம்ரன் ஹெட்மயர், யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் பஞ்சாப் கிங்ஸை 4 விக்கெட்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் ப்ளே ஓவ் சுற்று வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் இழந்தது. அத்துடன், இந்த வருட ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸின் சாம் கரனுக்கும் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதற்கு சொற்ப வாய்ப்பு தோன்றியுள்ளது. ஆனால், இன்றும் (20), நாளையும் (21) நடைபெறவுள்ள கடைசி நான்கு லீக் போட்டிகளின் முடிவுகளிலேயே கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸின் ப்ளே ஓவ் வாய்ப்பு தங்கியிருக்கிறது.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் பருவ காலத்தில் விலையேறப்பெற்ற வீரராக 2.23 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பஞ்சாபினால் வாங்கப்பட்ட சாம் கரன், நேற்றைய போட்டியில் திறமையாக துடுப்பெடுத்தாடி தனது 2ஆவது அரைச் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டார்.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ஷிக்கர் தவான் உட்பட முன்வரிசை வீரர்கள் நால்வர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவற, 7ஆவது ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

ஆனால், சாம் கரன், ஜிட்டேஷ் ஷர்மா, எம். ஷாருக்கான் ஆகிய மூவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி அணியை பலமான நிலையில் இட்டனர்.

5ஆவது விக்கெட்டில் ஜிட்டேஷ் ஷர்மாவுடன் 64 ஓட்டங்களை பகிர்ந்த சாம் கரன், பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் ஷாருக் கானுடன் மேலும் 73 ஓட்டங்ளைப் பகிர்ந்தார்.

14 ஒவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்ளை பெற்றிருந்த பஞ்சாப் கிங்ஸ் அடுத்த 2 ஓவர்களில் 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆனால், கடைசி 4 ஓவர்களில் 62 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதால் பஞ்சாப் கிங்ஸ் சிறந்த நிலையை அடைந்தது.

ஜிட்டேஷ் ஷர்மா 28 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றதுடன், சாம் கரன் 31 பந்துகளில் 49 ஓட்டங்களுடனும் ஷாருக் கான் 23 பந்துகளில் 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் நவ்தீப் சைனி 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

188 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

2022 ஐ.பி.எல். பருவகாலத்தில் துடுப்பாட்டத்தில் மொத்தமாக 863 ஓட்டங்களைக் குவித்து அசத்திய ஜொஸ் பட்லர் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அத்துடன் இந்த வருடம் அவர் 5 தடவைகள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்துள்ளார்.

12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையிலிருந்து ஜோடி சேர்ந்த யஷ்ஸ்வி ஜய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.  

படிக்கல் 57 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து சஞ்சு செம்சன் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். (90 - 3 விக்.)

மொத்த எண்ணிக்கை 137 ஓட்டங்களாக இருந்தபோது ஜய்ஸ்வால் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 

தொடர்ந்து ஹெட்மயரும் ரியான் பராகும் திறமையாக துடுப்பெடுத்தாடி ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு உயிரூட்டம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ஹெட்மயர் 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சாம் கரனின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் பிடி எடுத்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கினார். ஆனால், உடனடியாகவே மத்திஸ்தரின் தீர்ப்பை மீளாய்வுக்கு ஹெட்மயர் உட்படுத்தினார்.

பந்து அவரது துடுப்பில் படவில்லை என்பதை 3ஆவது மத்தியஸ்தர் உறுதிப்படுத்த கள மத்தியஸ்தர் தனது தீர்ப்பை திருத்தி அமைத்தார்.

இதனைத் தொடர்ந்து ரியான் பராக் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, 19ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஷிம்ரன் ஹெட்மயர் 46 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவைப்பட்ட 9 ஓட்டங்களை த்ருவ் ஜுரெல், ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர். கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் த்ருவ் ஜுரெல் 4ஆவது பந்தை சிக்ஸாக விசுக்கி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

த்ருவ் ஜுரெல் 4 பந்துகளில் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53