தற்போதெல்லாம் மருத்துவ சிகிச்சை என்பது வளர்ச்சியடைந்து வரும் மருத்துவ தொழில்நுட்பங்களால் நவீனமயமாகி வருகிறது. லேப்ராஸ்கோப்பி, எண்டாஸ்கோப்பி ஆகியவற்றின் மூலமாக சிறு துளை சத்திர சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ரோபாடிக் என்ற இயந்திரத்தின் மூலம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறது.

ரோபோடிக் சத்திர சிகிச்சையானது, மருத்துவர்கள் கன்சோல் என்ற அமைப்பின் முன்பு அமர்ந்து, டாவின்சி என்ற நவீன ரோபோட் இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சை முறையால் அதிக இரத்த இழப்பு ஏற்படுவதில்லை. குறைந்த நேர மயக்கம், குறைவான வலியே இருக்கும். மேலும், மருத்துவமனையில் 3 நாள்கள் தங்கினாலே போதுமானது. தழும்புகள் ஏற்படாது.இதன் மூலமாக சிக்கலான சத்திர சிகிச்சை, பைபாஸ் சர்ஜேரி, வால்வு பழுது நீக்குதல், வால்வு மாற்று சத்திர சிகிச்சை, அனைத்து வகையினதான கட்டிகள் அகற்றுதல் போன்ற சிகிச்சைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

டொக்டர்  பழனிச்சாமி M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்