நாட்டில் வறட்சியான காலநிலை நிலவியுள்ள நிலையில் பல மாவட்டங்களை சேர்ந்த அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்வளம் கொண்ட மலையக தோட்டபுறங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைவேண்டி தோட்டப்பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தண்ணீர் ஊற்றி பூஜைவழிபாடுகளில் பொதுமக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் லிந்துலை டில்குற்றி தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று மாலை 05 மணியளவில் ஆலயத்தில் சுற்று வட்டாரங்களுக்கும் சுவாமி விக்ரங்களுக்கும் குளிர்ச்சி அளிக்கும் வகையில் நீராபிஷேகம் செய்யப்பட்டது. இதில் இத்தோட்ட மக்கள் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.