LankaPay டெக்னோவேஷன் விருதுகள் 2023இல் "ஆண்டின் சிறந்த பொது ATM கையகப்படுத்துநர் - வகை C" தங்க விருதை அமானா வங்கி சுவீகரித்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை LankaPay தேசிய கொடுப்பனவு வலையமைப்பின் செயற்பாட்டாளரான LankaClear லிமிடெட் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் நோக்கம், நாட்டில் காணப்படும் கொடுப்பனவு தொழில்நுட்ப புத்தாக்கவியலாளர்களை கெளரவிப்பதாக அமைந்துள்ளது.
வாடிக்கையாளர் செளகரியத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொள்வதுடன், இலத்திரனியல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த செயற்பாட்டாளர்களை கெளரவிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
அமானா வங்கியின் பிரதம தகவல் அதிகாரி (CIO) மொஹமட் கியாசுதீன், வைப்புகள் மற்றும் டிஜிட்டல் முன்னெடுப்புகளுக்கான உதவி பிரதித் தலைவர் அர்ஷாத் ஜமால்தீன் மற்றும் சக பணியாளர்களான ரிஃபாத் ரிஸான், லெய்லா ஜலீல் மற்றும் ஷஹீர் நௌஷாத் ஆகியோர் Lankapay டெக்னோவேஷன் விருதுகள் 2023இல் பெற்றுக்கொண்ட விருதுடன் உள்ளனர்.
இந்த விருதை வெற்றியீட்டியமை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம தகவல் அதிகாரி மொஹமட் கியாசுதீன் கருத்து தெரிவிக்கையில்,
"தொழில்நுட்ப புத்தாக்கம் மூலம் வாடிக்கையாளர் அணுகல் மற்றும் செளகரியத்தை எளிதாக்குவதற்காகவும் மீண்டும் LankaPayயினால் கெளரவிக்கப்பட்டுள்ளமையையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.
முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சுய வங்கிச் சேவை நிலையங்களை நிறுவுவதில் எமது முதலீடுகளை மேற்கொள்ளும் எமது தந்திரோபாயம், எங்களுக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. தமது நிதியை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவையையும் பல வாடிக்கையாளர்களுக்கு இல்லாமல் செய்து, செளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
உலகளாவிய ரீதியில் வளர்ச்சி கண்டுவரும் வட்டியில்லாத பங்கேற்பு வங்கியியல் மாதிரியை முழுமையாக பின்பற்றி இயங்கும் இலங்கையின் முதலாவதும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கிறது.
வளர்ச்சிக்கு வழிகோலல் மற்றும் வாழ்வுக்கு வளமூட்டல் எனும் தன்னேற்புத் திட்டத்துக்கமைய, தனது வளர்ந்து வரும் 33 கிளைகள், 20 சுய வங்கிச் சேவை நிலையங்கள், 5800+ ATM அணுகல் பகுதிகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களை வங்கி சென்றடைவதுடன், உங்கள் வங்கி பன்முக கட்டமைப்பான ஒன்லைன் வங்கிச் சேவை, eOnboarding ஒன்லைன் கணக்கு ஆரம்பிப்பு சேவைகள், SMS அலர்ட்ஸ் வசதியுடனான டெபிட் அட்டைகள், 24 x 7 பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கு பிரத்தியேகமான வங்கியியல் அலகுகள் போன்ற பல வாடிக்கையாளர் செளகரியங்களை அறிமுகம் செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கிறது.
ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குழு பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குழு AAA தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தை கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கி ஏசியன் பேங்கரினால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM