(எம்.ஆர்.எம்.வசீம்)
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள இணையவழியில் திகதி மற்றும் நேரம் ஒதுக்கும் முறை 17ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவருக்கும் கடவுச்சீட்டு விநியோக்கப்படுகிறது என குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.
கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு திணைக்களம் எடுத்துவரும் புதிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள இணையவழியில் திகதி மற்றும் நேரம் ஒதுக்கும் முறை 17ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் நேற்று 18ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவருக்கும் கடவுச்சீட்டு விநியோக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கடவுசீட்டு பெற்றுக்கொள்வதற்காக திணைக்களத்துக்கு வரும் அனைவருக்கும் அவர்கள் வருகை தரும் அடிப்படையில் டோக்கன் முறைமையில் விநியோகிக்கப்படும்.
அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டிருக்கிறது.
புதிய முறைமைக்கமைய, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள திணைக்களத்துக்கு வருகை தராமல் தங்களின் வீடுகளில் இருந்தே இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியுமான வகையில் வசதிகளை ஏற்படுத்த இருக்கிறோம்.
அதற்கு தேவையான விரல் அடையாளம் இடுவதற்காக, நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 50 பிரதேச செயலகங்கள் பெயரிடப்படும்.
அத்துடன் கடவுச்சீட்டு பெற்றுக்காெள்வதற்கான கட்டணத்தை இலங்கை வங்கி மற்றும் இணையவழி ஊடாக செலுத்துவதற்கு முடியுமான வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம் கடவுச்சீட்டை 3 தினங்களுக்குள் அரச தபால் திணைக்களத்தின் ஊடாக வீடுகளுக்கே காெண்டுவந்து கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM