2008 மும்பைத் தாக்குதல்: தஹாவுர் ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

Published By: Sethu

18 May, 2023 | 04:00 PM
image

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வர்த்தகர் தஹாவுர் ரானாவை,  2008 மும்பை தாக்குதல்கள் தொடர்பில் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மும்பையில் 2008 நவம்பர் 26 ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கம் தாக்குதலில் 166 பேர்  உயிரிழந்தனர்.

 அந்த தாக்குதலை நடத்திய இயக்கத்திற்கு உதவிய குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்காவில் தஹாவுர் ராணா 2009 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 

பாகிஸ்தானில் பிறந்த தஹாவுர் ரானா  (62) கனேடிய பிரஜையாவார்.  மருத்துவரான அவர் அமெரிக்காவின் சிகாக்கோவில் பல வர்த்தங்களை நடத்தி வந்தார்.

2008  மும்பைத் தாக்குதல்களை நடத்துவதற்காக, தனது நண்பரான டேவிட் ஹெட்லியுடன் இணைந்து லக்ஷர் ஈ தொய்பா அமைப்புக்கு ரானா  உதவியளித்ததாக இந்தியா குற்றம் சுமத்துகிறது. டேவிட் ஹட்லி அமெரிக்காவில் 35 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். 

2011 ஆம் ஆண்டு தஹாவுர் ரானாவை குற்றவாளியாக அறிவித்த  அமெரிக்க நீதிமன்றம், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 

2020 ஆம் ஆண்டு கொவிட்19 தொற்றுக்குள்ளான நிலையில் தஹாவுர் ரானா அமெரிக்க  சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

எனினும், அவரை நாடு கடத்துமாறு இந்தியா கோரியதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தன்னை இந்தியாவுக்கு  நாடு கடத்துவதற்கு  தஹாவுர் ரானா  எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரை இந்தியாவுக்க நாடு கடத்துவதற்கு கலிபோர்னியாவிலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றின் நீதிபதி  ஜாக்குலின் சூல்ஜியான் நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17