2021/2022 நிதியாண்டுக்கான பிசினஸ் டுடே சிறந்த 40 நிறுவனங்களுக்கான பட்டியலில் 9 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தைப் பெற்றதன் மூலம் தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ஏப்ரல் 20 அன்று ஒரு விருது விழாவின்போது அறிவிக்கப்பட்டது.
2020/2021 விருதுகளில் தேசிய அபிவிருத்தி வங்கி 21வது இடத்தைப் பெற்றதை கருத்தில் கொள்ளும்போது இச்சாதனை மிகவும் சிறப்பானது. இது ஒரு வருடத்தில் வங்கி அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
தேசிய அபிவிருத்தி வங்கியானது வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சூழலுக்கு அமைய இயங்குவதற்கு, அதன் திறமையான குழு, நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள், மேம்பட்ட டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் என்பன பெரும் பங்களிக்கின்றன.
இந்த செயற்பாடுகள் தேசிய அபிவிருத்தி வங்கிக்கு பொருளாதார திடீர் மாற்றங்களின் விளைவுகளை தணிக்கவும் அனைத்து பங்குதாரர்களுக்கும் குறிப்பிடத்தக்க மதிப்பை உருவாக்கவும் உதவின.
மேலும், தேசிய அபிவிருத்தி வங்கி கடந்த ஆறு ஆண்டுகளாக வங்கித்துறையில் மொத்த சொத்துக்கள், மொத்த கடன்கள் மற்றும் வைப்புகளுக்கான மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களை தொடர்ந்து பராமரித்து வருகிறது.
தேசிய அபிவிருத்தி வங்கியின் இந்த சாதனையானது அதன் முதன்மையான டிஜிட்டல் சேவையான NDB NEOS மூலம் அதன் டிஜிட்டல் மூலோபாயத்தை இயக்குவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க NDB வங்கியின் பணிப்பாளர் - பிரதம நிறைவேற்று அதிகாரியான டிமந்த செனவிரத்னவுக்கு பிசினஸ் டுடே விருதை வழங்கினார்.
NDB NEOS இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய மேம்பாடுகள் தொழில்துறையில் முதன்மையானது.
வாடிக்கையாளர்களின் இருப்பிடம் எதுவாக இருந்தாலும், ஒரே இயங்குதளத்தின் மூலம் கணக்குகளை திறக்கவும், நிதி பரிமாற்றங்களைச் செய்யவும், கொடுப்பனவுகள் மற்றும் பல விடயங்களை செய்யவும் உதவுகிறது.
இந்த முன்னேற்றங்கள் பல டிஜிட்டல் தீர்வுகளில் முன்னோடியாகவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், சிக்கலை குறைக்கவும், மாற்றப்பட்ட தளத்தில் செயற்படும் மாதிரியை மேம்படுத்தவும் டிஜிட்டல்மயமாக்கலை விரைவுபடுத்தல் போன்ற முன்னேற்றங்கள் பல டிஜிட்டல் தீர்வுகளில் முன்னோடியாக தேசிய அபிவிருத்தி வங்கி, பிசினஸ் டுடேவிடமிருந்து பாராட்டை பெற வழிவகுத்தது.
மேலும், தேசிய அபிவிருத்தி வங்கி பெண்களை ஊக்குவிக்கும் பல திட்டங்களில் மூலோபாய ரீதியாக முதலீடும் செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் மறுசீரமைப்பு மற்றும் பிற நிலைத்தன்மை முயற்சிகள், வங்கியின் பாராட்டத்தக்க செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியின் வெற்றிக்கு அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கையே காரணம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
தேசிய அபிவிருத்தி வங்கி இந்த நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கு மிகவும் மதிப்பளிப்பதோடு, அனைவருக்கும் பலனளிக்கும் அனுபவத்தை உறுதி செய்யும் சிறந்த சேவைகளையும் வழங்க முயற்சிக்கிறது.
தேசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் நான்காவது பெரிய பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கியாகும். இலங்கை வெளியீடான LMDயின் வருடாந்த தரவரிசையின்படி, 2022ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக விருது பெற்ற நிறுவனமாக, இவ்வங்கி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நிலைத்திருக்கிறது.
Global Finance USA மற்றும் Euromoney ஆகியவற்றால் 2022ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த வங்கியாக தேசிய அபிவிருத்தி வங்கி தெரிவுசெய்யப்பட்டது. கூடுதலாக, “Great Place to Work USA"ஆல் இலங்கையில் 2022இன் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக இவ்வங்கி பெயரிடப்பட்டது.
இது தேசிய அபிவிருத்தி வங்கியின் தாய் நிறுவனமான தேசிய அபிவிருத்தி வங்கி குழுமம், தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மூலதன சந்தைகளின் துணை நிறுவனங்களை உள்ளடக்கியது. ஒன்றாக ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது.
டிஜிட்டல் வங்கி தீர்வுகள் மூலம் இயங்கும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM