கருத்தொருமைவாத தேசிய அரசாங்கம் விரைவில் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பு வரைபில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். நல்லிணக்கத்தை பிரதான நோக்கமாகக் கொண்டதாகவே புதிய அரசியலமைப்பு அமையும் என்று நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்தே புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்.அதாவது தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் வகையில் நாட்டின் புதிய அரசியலமைப்பு அமையும் என்பதனை உறுதிபடத் தெரிவிக்கின்றோம். எனவே தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளமை மற்றும் அதில் தமிழ் பேசும் மக்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்வாங்கப்படும் என்பது குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்
எமது கருத்தொருமைவாத தேசிய அரசாங்கமானது இந்த நாட்டில் பாரிய புரட்சிகர மாற்றங்களை செய்துள்ளது. கடந்த ஒருவருட காலமாக இவ்வாறு பாரிய புரட்சிகர மாற்றங்களை எமது அரசாங்கம் செய்த நிலையில் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு தேவையான மாற்றங்களை செய்வோம்.
குறிப்பாக தமிழ் மக்கள் விடயத்தில் பாரிய திருப்பங்களை முன்னெடுத்தோம். அவற்றை நாங்கள் எதிர்காலத்திலும் தொடருவோம். எனவே தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். இதுவே மிகவும் முக்கியமானதாகும்.
இதேவேளை புதிய வருடத்தில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைக்கும் பிரேரணை பிரதமரினால் முன்வைக்கப்படவுள்ளது.
அந்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாறும். அதன் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். விசேடமாக தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்தே புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்குவோம். அதாவது தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் வகையில் நாட்டின் புதிய அரசியலமைப்பு அமையும்.
அத்துடன் புதிய அரசியலமைப்பில் நாட்டின் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதை நாங்கள் பிரதான செயற்பாடாக கொண்டுள்ளோம்.
மேலும் கருத்தொருமைவாத தேசிய அரசாங்கம் விரைவில் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். நல்லிணக்கத்தை பிரதான நோக்கமாகக் கொண்டதாகவே புதிய அரசியலமைப்பு வரும் என்பதே இங்கு முக்கியமான விடயமாகும்.
மிகவும் விசேடமாக நாட்டின் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற விடயத்தை இங்க வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
கேள்வி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில்?
பதில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவமளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும்போது நீங்கள் கேட்கின்ற விடயமும் அதில் உள்ளடங்குகின்றது. அவற்றை கவனத்திற்கொண்டே எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். ஆனால் அதற்கு தமிழ் மக்கள் எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டியது அவசியமாகும் என்றார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றவுள்ள அரசாங்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்யவுள்ள இந்த பிரேரணையில் பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய அரசியலமைப்பு குறித்து அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் யோசனைகளை முன்வைக்கலாம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM