(ஏ.என்.ஐ)
இலங்கைக்கும் அயோத்திக்கும் இடையேயான ஆழமான உறவுகள் புகழின் உச்சத்தை எட்ட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொட கடந்த புதன்கிழமை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாரணாசி விமான நிலையத்தில் நிறுவப்படவுள்ள இரண்டு ஓவியங்களை அன்பளிப்பாக வழங்கினார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான கலாசார உறவுகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் இராமாயண காலத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்தினர். இதன் மூலம் இந்திய குடிமக்கள், குறிப்பாக உத்தரபிரதேசம், இலங்கையில் உள்ள இராமாயண தலங்களை பார்வையிடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்று இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் முன்னோடியில்லாத வளர்ச்சியை ஏற்படுத்த முதல்வர் யோகியின் முயற்சிகளை மிலிந்த மொரகொடா இதன் போது பாராட்டினார்.
இராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் உத்தரப்பிரதேசத்திற்கும் இடையே சுமூகமான உறவுகள் இருப்பதாகவும், இந்த உரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM