அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திருட்டுச் சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்பின் பேரில் நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது, காத்தான்குடி பொலிஸார் பூநொச்சிமுனை உள்வீதியில் நடத்திய திடீர் சோதனையில் இந்த மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் எதுவுமின்றி காணப்பட்டதால் பொலிஸார் அதனை மீட்டதுடன், திருட்டுக் குற்றச் செயலோடு தொடர்புடைய நபரொருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் காத்தான்குடி பொலிஸார் அறிவித்திருந்ததை அடுத்து, குறித்த வாகனம் அக்கரைப்பற்று பகுதியில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் தான் என்பதை அக்கரைப்பற்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM