(எம்.ஆர்.எம்.வசீம்)
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நாள் மற்றும் திகதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளாமல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியலாயத்துக்கு வருவதன் மூலம் மக்கள் அங்கு சில தினங்களாக வரிசையில் இருப்பதால் அந்த பகுதிக்கு வெளியில் நேற்று புதன்கிழமை நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வந்திருக்கும் மக்கள் அந்த இடத்துக்கு வெளியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன் அவர்களில் விண்ணப்பதாரிகள் 500 பேர்வரை மாத்திரம் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது.
நாட்டின் தூரப்பிரதேசங்களில் வந்திருப்பவர்கள் இந்த வரிசையில் காத்திருப்பதுடன் சிலர் சிறு குழந்தைகளையும் அவர்களுடன் அழைத்து வந்திருக்கின்றனர். எப்படியாவது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியுமாகும் என்ற நம்பிக்கையிலேயே இவர்கள் அங்கு வந்திருப்பதாக அவர்களில் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.
என்றாலும் இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவிக்கையில், தற்போது இந்த பகுதியில் இருக்கும் நெருக்கடி நிலை இன்றுடன் முடிவடையும். திகதி மற்றும் நேரம் ஒதுக்கிக்கொண்டுள்ள இறுதி விண்ணப்பதாரிகள் 1,800 பேருக்கு இன்றைய தினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகித்து முடிக்க இருக்கிறது.
இந்த மாதம் 17 ஆம் திகதிவரை மாத்திரம் திகதி மற்றும் நேரம் விநியோகித்து இந்த முறைமையை முடித்துள்ளோம். இன்று 18ஆம் திகதி இதற்கு முன்புபோன்று இங்குவந்து வருகைதரும் அடிப்படையில் விண்ணப்பப்படிவங்களை சர்ப்பிக்கலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM