(எம். எம். சில்வெஸ்டர்)
இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் நடைபெறவுள்ள புளோரன்ஸ் டயமண்ட் லீக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் பங்கேற்கவுள்ளார்.
எதிர்வரும் 2 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள இப்போட்டியில், உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரர்கள் பலரும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இப்போட்டியில், 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் நடப்பு உலக சம்பியனான அமெரிக்காவின் பிரெட் கெர்லி, ஒலிம்பிக் சம்பியனான இத்தாலியின் மார்செல் ஜேகொப்ஸ் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் சம்பியனான கென்யாவின் பேர்டினண்ட் ஒமன்யாலா ஆகிய முன்னணி வீரர்களுடன் யுப்புன் அபேகோன் போட்டியிடவுள்ளார்.
இது தவிர, முன்னாள் உலக சம்பியன் ஜமைக்காவின் யொஹான் பிளேக், முன்னாள் உள்ளக சம்பியன் ட்ரைவோன் ப்ரோமல் மற்றும் பொதுநலவாய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் ஆபிரிக்காவின் அகானி சிம்பைன் ஆகியோரும் புளோரன்ஸ் டயமண்ட் லீக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
டயமண்ட் லீக் மெய்வல்லுநர் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவதும் ஒரேயொரு வீரராக யுப்புன் அபேகோன் திகழ்கிறார். இவர் இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டில் பங்கேற்றிருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு சூரிச் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுநர் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த யுப்புன், 5ஆவது இடத்தை பிடித்திருந்தார்.
இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய மற்றும் தெற்காசிய சாதனையாளராக திகழும் யுப்புன் அபேகோன், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவின் 100 மீற்றரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
மேலும், 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து, 10 செக்கன்களுக்கு குறைவான நேரத்தில் 100 மீற்றரை நிறைவு செய்த முதலாவது இலங்கையர் என்ற பெருமைக்குரியவராவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM