(எம்.ஆர்.எம்.வசீம்)
கிழக்கு மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமானுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு இருவரும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு காணப்படும் காணிப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கல்வி, சுகாதார துறைகளில் பாரிய பிரச்சினைகள் இருந்து வருகின்றன. பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவரது, மாணவர்களுக்கு தேவையான தளபாட தேவைகளை ஏற்படுத்திக்கொடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
அதேபோன்று வைத்தியசாலைகளில் பல தேவைப்பாடுகள் இருக்கின்றன. இ்வ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் எடுத்துக்கூறியுள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் சகிதம் விரைவில் ஆளுநருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM