சட்டத்துக்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் - அரசாங்கம் உறுதி 

Published By: Nanthini

17 May, 2023 | 09:19 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் தொழிலாளர் சட்டத்துக்கு உட்பட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களான ஜனவசம, பெருந்தோட்ட யாக்கம் உள்ளிட்டவற்றின் தொழிலாளர்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் இன்று (17) புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வேலுகுமார் மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவை அமைச்சில் சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார். இந்த சந்திப்பிலேயே அவர்களால் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண, மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், 

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஜனவசம, பெருந்தோட்ட யாக்கம் தோட்டம் என்பவற்றில் உள்ள தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். காணி அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இங்கு நீண்ட காலம் தீர்க்கப்படாமல் உள்ளன.

இந்த பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் இயங்கும் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஊழியர் சேமலாப நிதியம் வழங்கப்படாமல் உள்ளது. மவுன்ஜின், கலபொட, மாவில, ரொக்வூட் போன்ற பிரதேசங்களில் உள்ள காணிகள் வெளியாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அங்குள்ள பெருந்தோட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை. 

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அத்தோடு கம்பஹா மாவட்டத்தில் ஜனவசம பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் காணப்படும் ஒரு தோட்டத்தை விற்றேனும் அந்த பணத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாகசேனை, கந்தலோயா, மாவில, கலபொட, றொக்வூட் போன்ற பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் குத்தகைக்கு வழங்க வேண்டும் என்றும், இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-01-22 06:30:28
news-image

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக...

2025-01-22 05:07:19
news-image

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை...

2025-01-22 05:02:53
news-image

குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக...

2025-01-22 04:52:42
news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,032...

2025-01-22 04:47:32
news-image

கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே...

2025-01-22 04:44:54
news-image

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும்...

2025-01-22 04:39:52
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21