சட்ட விரோத மரக்கடத்தலின்போது துப்பாக்கிச் சூடு : சாரதி தப்பியோட்டம் ; பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்! 

Published By: Nanthini

17 May, 2023 | 03:24 PM
image

சட்ட விரோத மரக்கடத்தலோடு தொடர்புடைய சந்தேக நபரான வாகன சாரதியொருவர் தப்பியோடியதோடு, அவ்வேளை ஏற்பட்ட வாகன மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவமொன்று இன்று (16) அதிகாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

பறயனாளங்குளம் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவர்கள் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு, சாளம்பன் பகுதியில் சட்ட விரோதமாக மரக்கடத்தலில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கும் முயன்றுள்ளனர்.

அவ்வேளை சந்தேகத்துக்கிடமான கெப் ரக வாகனமொன்றை நிறுத்துவதற்காக வழிமறித்துள்ளனர். 

எனினும், குறித்த வாகனம் நிறுத்தப்படாமல், விஷேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதியதையடுத்து, வாகனம் முன்செல்ல விளைந்தபோது, குறித்த வாகனத்தை நிறுத்துவதற்காக அதன் முன்சக்கரத்தில்  பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அப்போது வாகனத்தின் சாரதி கெப் ஓடிக்கொண்டிருக்கும்போதே கீழே குதித்து தப்பிச் சென்றுள்ளார்.

அதனையடுத்து, குறித்த வாகனம் மற்றும் அதனுள் இருந்த ஏழு பெரிய முதிரை மரக்குற்றிகளும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு, ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்த வாகன மோதலில் பறயனாளங்குளம் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்திரதிலக என்பவரே காயமடைந்துள்ளார்.

அதனையடுத்து, காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  காயங்கள் பாரதூரமானதாக இல்லாத நிலையில் உரிய சிகிச்சையை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பறயனாளங்குளம்  விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட...

2024-12-11 11:55:20
news-image

புத்தளத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு...

2024-12-11 11:42:37
news-image

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மூதாட்டி...

2024-12-11 11:31:59
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2024-12-11 11:10:42
news-image

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு!...

2024-12-11 11:15:14
news-image

அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான...

2024-12-11 11:04:21
news-image

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை...

2024-12-11 10:38:06
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2024-12-11 10:33:39
news-image

”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை...

2024-12-11 10:44:56
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர் சிகிச்சை...

2024-12-11 10:19:06
news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம்...

2024-12-11 09:55:45
news-image

வடக்கு ஆளுநருக்கும் பிரிட்டன் தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையே...

2024-12-11 09:54:54