பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுவால் தாக்கப்பட்ட சக மாணவன் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிடிவதை தொடாபில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவன் ஒருவருக்கு அதே பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் வருடமாணவர்கள் பகிடிவதைக்கு ஆதரவாகசெயற்பட்டதாகவும் அக்குழுவே தாக்குதல்மேற்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
மேற்படி சம்பவம் பட்டப்பின் படிப்பு நிலையக்கட்டிட வாசலில் இடம்பெற்றதாக மேலும் தெரியவருகிறது. தாக்குதலை மேற்கொண்டதாகக் கருதப்படும் 8 பேரை சந்தேகத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிசார் தெரிவிததனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் நீதிபதியொருவரின் புதல்வரென்பது குறிப்பிடத்தக்கது.