மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது ஏற்பாடு செய்த ‘வெசாக் பாராயணம் ஓதல்’ நிகழ்வு

Published By: Nanthini

16 May, 2023 | 08:57 PM
image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் வெசாக் போயா தினத்தன்று ‘கீதாஞ்சலி வெசாக் பாராயணம் ஓதல்’ என்ற வெசாக் பக்தி பாடல் ஓதல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்த பிரானின் பிறப்பு, ஞானம் மற்றும் முக்தி ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் வெசாக் தினத்தில் இப்பாராயணம் நடைபெற்றது. 

வெசாக் வலயத்தில் அமைந்த யூனியன் பிளேஸ் கிளையில் வெசாக் பாராயண இசைப்பாடல் இடம்பெற்றதுடன், மக்கள் வங்கியின் கொழும்பு தெற்கு பிராந்தியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் வங்கியின் ஏதுகல்புர கிளையைச் சேர்ந்த எரந்தி முனசிங்க பாடல் வரிகளை  எழுதியுள்ளார். அதே வேளையில் இசையமைப்பையும் பாடலுக்கான பயிற்சியையும் கொழும்பு யசோதரா வித்தியாலயத்தின் இசை ஆசிரியர் ரவ்னித்ரா சப்பரமாது மற்றும் கொழும்பு 02, பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் இசை ஆசிரியர் லால் ரூபசிங்க ஆகியோர் மேற்கொண்டனர். 

மேலும், இக்கிளை வெசாக் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதுடன், வழிப்போக்கர்களுக்கு கோப்பி மற்றும் பிஸ்கட் தாகசாந்தியும் வழங்கி உபசரிக்கப்பட்டது.

மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா, முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக்கு கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன, மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி நாலக விஜயவர்தன, கொழும்பு தெற்கு பிராந்திய முகாமையாளர் மாதவ கனக ஹேவகே மற்றும் கொம்பனி தெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், ஏனைய பெருந்திரளானோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கியின் கோடி அதிர்ஷ்டம் 2023...

2023-05-29 15:56:24
news-image

ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய...

2023-05-25 10:11:01
news-image

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ்...

2023-05-25 09:56:13
news-image

நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்க...

2023-05-25 10:09:50
news-image

'People’s Remittance கோடி அதிர்ஷ்டம்’ ஆண்டிறுதி...

2023-05-24 14:55:31
news-image

விளம்பரத்துறையை புதுப்பிக்க 3R உத்தியை இயக்க...

2023-05-22 20:19:51
news-image

DSI அதன் AVI வர்த்தகநாமத்தின் மீறலுக்கு...

2023-05-22 13:33:00
news-image

AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன...

2023-05-22 12:39:22
news-image

அமானா வங்கி 'LankaPay டெக்னோவேஷன் விருதுகள்...

2023-05-18 17:08:15
news-image

பிசினஸ் டுடேயின் சிறந்த 40 நிறுவனங்கள்...

2023-05-18 14:31:58
news-image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது...

2023-05-16 20:57:13
news-image

கடன் தள்ளுபடி குறித்த செய்திக்கு மக்கள்...

2023-05-16 21:25:27