பாதுகாப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கு விளக்கம்

Published By: Vishnu

16 May, 2023 | 08:57 PM
image

(எம்.மனோசித்ரா)

இராணுவத்தினரின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை பேணி அவர்களை பாரம்பரிய கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உட்பட, பாதுகாப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அமெரிக்க பிரதி உதவி செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) அஃப்ரீன் அக்தருடன் செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான, அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதன் போது தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர்  அக்தரிடம்  தெரிவிக்கப்பட்டன.

அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

மேலும் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவும் அமெரிக்காவின் முயற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகளை அதன் பாதுகாப்புக் கொள்கையில் முன்வைப்பதற்கான இலங்கையின் முயற்சிகள் ஆகியவை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலின் போது இராஜாங்க அமைச்சர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-01 06:27:02
news-image

மத்திய மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை...

2024-03-01 02:28:09
news-image

வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களின்...

2024-03-01 02:04:26
news-image

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின்...

2024-03-01 01:15:03
news-image

சபாநாயகரின் தீர்மானம் பிழை என்றால் நீதிமன்றம்...

2024-02-29 23:54:44
news-image

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை...

2024-02-29 21:51:35
news-image

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் சட்டவாட்சிக்கு...

2024-02-29 23:03:12
news-image

மன்னாரில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் ...

2024-02-29 21:52:22
news-image

சந்தேகத்திற்கிடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட...

2024-02-29 21:54:10
news-image

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர...

2024-02-29 21:55:44
news-image

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024-02-29 21:52:44
news-image

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்துக்கு தயங்க...

2024-02-29 21:49:28