அருள்நிதி நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

Published By: Ponmalar

16 May, 2023 | 02:46 PM
image

நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அவ கண்ண பாத்தா ஐயோ அம்மா..' எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

'ராட்சசி' படத்தை இயக்கிய இயக்குநர் சை. கௌதம் ராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இதில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனீஸ்காந்த், சரத் லோகித் சவா, ராஜசிம்மன், 'யார்' கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற 'அவ கண்ண பாத்தா.

ஐயோ அம்மா. கரு நாகப்பாம்பா கொத்துதம்மா..' எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, ஜித்தின் ராஜ் பாடியிருக்கிறார். டி. இமானின் மெல்லிசை மெட்டில் தயாராகி இருக்கும் இந்தப் பாடலில்.. காதலியை கண்டவுடன் காதலனுக்கு ஏற்படும் விவரிக்க முடியாத உணர்வை ரசனையோடு உருவாக்கப்பட்டிருப்பதால், இளைய தலைமுறையினரிடத்தில் பாரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்