'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

16 May, 2023 | 01:59 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.

இந்த திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, கரு. பழனியப்பன், சின்னி ஜெயந்த், கனிகா, நரேன், இயக்குநர் மோகன் ராஜா, இமான் அண்ணாச்சி, ராஜேஷ், கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

புலம்பெயரும் ஈழத் தமிழர்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த உணர்வு பூர்வமான படைப்பை சந்திரா ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இசக்கி துரை தயாரித்திருக்கிறார்.

பல தடைகளைக் கடந்து இம்மாதம் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் எம் மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து உலகின் வேறு பகுதிகளில் வாழ விரும்பும் ஈழ தமிழர்களின் துயர் மிகுந்த வாழ்வியல் இடம் பிடித்திருக்கிறது.

ஏதிலிகளின் அரசியலை உரத்து பேசியிருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முன்னோட்டத்திற்கு உலக தமிழர்களிடையே பேராதரவு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03