ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் அமைந்துள்ள சின்னசாளம்பன் கிராமத்தில் கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தில் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய இரு மாணவிகளை இலக்கு வைத்தே குறித்த சம்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில்,
குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடித்து வீடு திரும்பும் போது இரு வாகனங்கள் தம்மை பின்தாெடர்ந்ததாகவும் அதில் கூலர் ரக, ஹயஸ் ரக வாகனங்கள் பின் தொடர்ந்த நிலையில் ஒரு வாகனத்தில் இருந்து கதவைத் திறந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் அந்த சிறுமிகளை தாம் வீட்டுக்கு கொண்டுவந்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.
குறித்த குழுவினரின் நடவடிக்கைகளை அவதானித்த சிறுமிகள் அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் தப்பியோடியுள்ளனர்.
தம்மை இரு வாகனங்களில் வந்தவர்கள் கடத்த முயற்சித்ததாக சிறுமிகள் அந்த வீட்டுக்காரர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில், குறித்த வாகனத்தின் நடமாட்டத்தினை தாம் அவதானித்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாட்டை வழங்கிய நிலையில், சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM