மன்னார் கரிசல் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்

Published By: Vishnu

16 May, 2023 | 12:25 PM
image

மன்னார் - பேசாலை  பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராம பகுதியில் திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் பெரிய கரிசல் பகுதியைச் சேர்ந்த எம்.ஜலீல் (வயது-25) என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

பேசாலை  பொலிஸ் பிரிவில் உள்ள கரிசல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் உள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர். பின்னர் இரண்டு விசேட அதிரடிப்படையினர் விசில் உடையில் குறித்த வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதன் போது சோதனைகளை முன்னெடுக்க முயன்ற போது குறித்த நபர் கத்தியை எடுத்து தாக்க முயன்ற நிலையில் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியால் குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது வயிறு மற்றும் கால் பகுதியில் குறித்த நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக குறித்த நபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56