கஷ்டங்களை அகற்றும் 'தூங்கா விளக்கு' பரிகாரம்

Published By: Ponmalar

16 May, 2023 | 11:06 AM
image

எமது வீதிகளில் மற்றும் ஊரில் இருக்கும் தொன்மையான.. புராதனமான ஆலயங்களில் மூலவர் சன்னதி மற்றும் பைரவர் சன்னதிகளில் 'தூங்கா விளக்கு' எனும் வருடம் முழுவதும் தொடர்ந்து எரியும் விளக்குகளை வைத்திருப்பர். இந்த விளக்கில் சுத்த பசு நெய்யை பயன்படுத்துவர். இந்த தீபம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.

பொதுவாக ஆலய வளாகங்களிலும் இறைவனின் சன்னதிகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டால், அதற்கு பிரத்யேக ஆற்றல் உண்டு. உங்களுடைய பிரச்சினைகளின் அடிப்படையில் ஜோதிட நிபுணர்களின் வழிகாட்டலுடன் 1, 5, 7, 9, 21, 27 எனும் எண்ணிக்கைகளில் விளக்கேற்றி வழிபட்டால்… உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும். வேறு சிலருக்கு அவர்களின் வயதை பொறுத்து... ஒரு வயதிற்கு ஒரு விளக்கு என்று விளக்கேற்றி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு ஜோதிட நிபுணர்கள் அறிவுறுத்துவர். இதுபோன்ற விளக்கேற்றும் பரிகாரம் அனைத்து ஆலயங்களிலும் மேற்கொள்ளலாம். இவை நல்ல பலன் அளிக்கும்.

இந்நிலையில் ஆலயங்களில் 24 மணித்தியாலமும் இருளை அண்ட விடாது தொடர்ந்து சுடர்விட்டு எரியும் தூங்கா விளக்குகளும் ஏழைகளுக்கான கஷ்டங்கள் விலகுவதற்கான எளிய பரிகாரமாகவும் திகழ்கின்றன. பொதுவாக சிறிய ஆலயம், பெரிய ஆலயம், புதிய ஆலயம், பழைய ஆலயம் என அனைத்திலும் அதிகாலை.. நண்பகல் உச்சி வேளை.. அந்திப்பொழுது.. ஆகிய தருணங்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கு பிரத்யேக ஆற்றல் உண்டு. இதனை மேற்கொள்வதன் மூலமாகவும் வாழ்க்கையில் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

அதேபோல் தூங்கா விளக்கு எனப்படும் தொடர்ந்து எரியும் விளக்குகளில் ஜோதி ஒளிர்ந்து கொண்டே இருப்பதற்கு சுத்தமான பசு நெய்யை வழங்குவதன் மூலம் உங்களின் பிரச்சினைகள் அகலும். இதுபோன்ற தூங்கா விளக்கு என்றும், அகண்ட விளக்கு என்றும் குறிப்பிடப்படும் விளக்குகளில் பசு நெய்யை தொடர்ந்து 8, 9, 21, 36 நாட்கள் வரை சேர்ப்பித்து, அணையா தீபத்தை பிரார்த்தித்து வந்தால், ஆபத்து காலங்களில் ஏற்படும் துன்பங்கள் குறையும். ஒருவர் மரண படுக்கையில் இருக்கும்போது அவருடைய உயிர் பிரியும் தருணங்களில்... அதன் கால அவகாசத்தை தள்ளி வைத்து, உடல் நலத்தை அதிகரிக்க செய்யும் அளவிற்கு வலிமை வாய்ந்தது இந்த தூங்கா விளக்கு பரிகாரம்.

உடனே எம்மில் சிலர் தூங்கா விளக்கு பரிகாரத்தை ஆலயங்களில் தான் மேற்கொள்ள வேண்டுமா? எங்களுடைய வீடுகளில் தனிப்பட்ட பூஜை அறைகளில் மேற்கொள்ளலாமா... எனக் கேட்பர். ஆலயங்களில் உள்ள தூங்கா விளக்கு மற்றும் அகண்ட விளக்குகளுக்கு மட்டும்தான் அத்தகைய ஆற்றல் இருக்கிறது என்பதால் இத்த எளிய பரிகாரத்தை ஆலயங்களில் சென்று தான் மேற்கொள்ள வேண்டும் என ஜோதிட நிபுணர்களும், ஆன்மீக பெரியோர்களும் அறிவுறுத்துகிறார்கள். அதே தருணத்தில் எம்முடைய வீடுகளில் தரையில் வைத்து ஏற்றப்படும் விளக்குகள்... அவை தொடர்ந்து 24 மணி நேரங்கள் சுடர் விட்டு எரிந்தாலும் அவை தூங்கா விளக்குகள் ஆகாது.

ஆலயங்களில் மூலவர் சன்னதி, பைரவர் சன்னதி ஆகிய இரு சன்னதிகளை தவிர்த்து காளி மற்றும் அம்பாள் சன்னதிகளிலும் தூங்கா விளக்கு இருக்கிறது. இங்கும் நீங்கள் இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் உரிய பலன் கிட்டும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் திருமுல்லைவாயில்...

2024-04-18 17:30:19
news-image

தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருள் பாலிக்கும்...

2024-04-17 17:44:50
news-image

யோகங்களை அருளும் யோகி தலங்கள் மற்றும்...

2024-04-16 14:24:26
news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11