ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னரும் சில செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உண்மையில் அதிகாரம் ஜனாதிபதியிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற கிறிஸ்ரி குகராஜாவின் நினைவுதினத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
குகனது இழப்பு வவுனியாவிற்கு பாரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கின்றது. வவுனியாவில் வாள்வெட்டு அதிகரித்துள்ளது.
கடத்தல் சம்பவங்கள் பணம்பறிப்பு, தற்கொலை என்பன இடம்பெற்று வருகின்றது. பொலிசார் இருந்தும் வவுனியா ஒரு மோசமான நிலையை அடைந்துள்ளது.
பொலிசாருக்கு பொறுப்பான அமைச்சர் வவுனியா மாவட்டம் மீது கவனம் செலுத்தவேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மையில் மரணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறான அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் செய்யும்.
இதேவேளை நாடு முழுவதும் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாகி உள்ளது. எனவே ஜனாதிபதி இதற்கான பதிலை மக்களுக்கு சொல்லவேண்டும். முப்படைகளை களம் இறக்கி மக்களை அச்சுறுத்துவது தவறான செயற்பாடகவே நான் பார்க்கிறேன்.
அண்மையில் ஜனாதிபதியுடன் எமது சந்திப்பு இடம்பெற்றது. சில விடயங்கள் தொடர்பாக அவர் உத்தரவிட்ட பின்னரும் அதனை மீறும் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடு வன்னியிலும் பரவலடைந்துள்ளது. எனவே அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கிறதா அல்லது மகிந்த ராஜபக்சக்களின் கைகளில் இந்த திணைக்களங்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கும் இருக்கின்றது.
மகிந்த தான் அவர்களுக்கு கட்டளை இடுகின்றாரா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.மொட்டு கட்சியை காப்பாற்றும் செயற்பாட்டை அவர் மேற்கொண்டால் அவர் செய்யும் நற்செயல்களுக்கும் கெட்ட பெயரே ஏற்படும். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM