மருதுமுனை மசூர் மௌலானா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மருதமுனை பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி4யூ வொரியர்ஸ் சம்பியனானது.

அணிக்கு 9 பேர் கொண்ட 7 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றப் போட்டியில் 10 அணிகள் பங்குபற்றின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சுனாமி யங்கர்ஸ் அணியை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட பி4யூ வொரியர்ஸ் அணி சம்பியானனது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சுனாமி யங்கர்ஸ் அணி 7 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பி4யூ வொரியர்ஸ் அணி 4.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
சம்பியனான பி4யூ வொரியர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 40,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற சுனாமி யங்கர்ஸ் அணிக்கு கிண்ணத்துடன் 20,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன
சுற்றுப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எம்.எம். நுசையிர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM