அடிக்கடி வாக்குவாதம், கருத்து முரண்பாடுகளுக்கு முகங்கொடுப்பவர்களை பார்த்து 'உங்களுக்கும் எனக்கும் பொருத்தம் இல்லை போலிருக்கிறது' என சொல்வது நம்மிடையே சாதாரண பழக்கமாகிவிட்டது.
ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களை கண்டதும் 'அவர்களது சகவாசமே வேண்டாம்' என ஓடுபவர்களையும் நாம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆகாத ராசிகள் ஒன்று சேர்ந்தால் இப்படி அடிக்கடி சண்டைகள் ஏற்படலாம், முகத்தை திருப்பிக்கொள்ளும் நிலை வரலாம் என ஜோதிடர்கள் சொல்கின்றனர். அப்படியானால், எந்தெந்த ராசிகளை இணைத்துக்கொண்டால் நல்லது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேஷ ராசியினருக்கு பொதுவாக துலாம் ராசியினர் ஓரளவுக்கு சுமுகமான உறவாக அமைகின்றனர். இவர்களுக்கு சிம்ம ராசி மற்றும் தனுசு இராசியினர் அதிர்ஷ்டகரமானவர்களாக இருக்கின்றனர். எனவே, மேஷ ராசியினர் இந்த ராசிகளை சேர்ந்தவர்களை திருமணம், கூட்டுத்தொழில் என்பவற்றுக்கு சேர்த்துகொள்ளலாம்.
ரிஷப ராசியினருக்கு கன்னி மற்றும் மகர ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இது தவிர விருச்சிக ராசியினரையும் அவர்கள் தம்முடன் இணைத்துக்கொள்ளலாம்.
மிதுன ராசியினருக்கு துலாம் மற்றும் கும்ப ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்களை திருமணம், கூட்டுத்தொழில் என்பவற்றுக்கு இணைத்துக்கொள்ளலாம். தனுசு ராசியினருடன் இவர்கள் பெரிதும் ஒத்துப்போவதில்லை.
கடக ராசியினர் விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களை திருமணம், கூட்டுத்தொழில் விடயங்களில் இணைத்துக்கொள்ளலாம்.
சிம்ம ராசியினருக்கு தனுசு மற்றும் மேஷ ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்கள் கும்ப ராசியினருடன் ஒத்துப்போவது மிகக் குறைவாகும்.
கன்னி ராசியினருக்கு மகரம் மற்றும் ரிஷப ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்கள் மீன ராசியினருடனும் சுமுகமாக பழகக்கூடியவர்களே.
துலாம் ராசியினருக்கு கும்பம் மற்றும் மிதுன ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்களுக்கு மேஷ ராசியினரும் ஓரளவுக்கு ஒத்துப்போகக்கூடியவர்கள். அல்லது அவர்கள் மீது கவர்ச்சி ஏற்படும் என கூறலாம்.
விருச்சிக ராசியினருக்கு மீனம் மற்றும் கடக ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்களுக்கு ரிஷப ராசியினர் ஓரளவுக்கு ஒத்துப்போகக்கூடியவர்கள் ஆவர்.
தனுசு ராசியினருக்கு மேஷம், கடகம் மற்றும் சிம்ம ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்கள் ரிஷப ராசியினருடன் ஒத்துப்போவது குறைவாகும்.
மகர ராசியினருக்கு ரிஷபம் மற்றும் கன்னி ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். துலாம் ராசியினருடனும் இவர்கள் சுமுகமாக பழகுகின்றனர்.
தனுசு ராசியினருக்கு மேஷம் மற்றும் சிம்ம ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்கள் கடக ராசியினருடனும் ஒத்துப்போகக்கூடியவர்கள்.
மகர ராசியினருக்கு ரிஷபம் மற்றும் கன்னி ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இது தவிர துலாம் ராசியினருடனும் இவர்கள் சுமுகமாக பழகுகின்றனர்.
கும்ப ராசியினருக்கு மிதுனம், துலாம் ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்கள் சிம்ம ராசியினருடன் ஒத்துப்போவது குறைவாகும்.
மீன ராசியினருக்கு கடகம் மற்றும் விருச்சிக ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்கள் கன்னி ராசியினருடனும் ஓரளவுக்கு இணக்கமாக செல்லக்கூடியவர்களாக இருப்பர்.
தொகுப்பு: எஸ். ரொஷாந்தினி
(ஜோதிட மூல நூல்கள், ஜோதிடர்கள் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலான தொகுப்பு)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM