ஐ.சி.சி. உலகக்கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் அணிகளின் இறுதி நிலை

Published By: Vishnu

15 May, 2023 | 04:37 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் அயர்லாந்தின் செல்ஸ்போர்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் சுற்றுப் போட்டி நிறைவுக்கு வந்தது.

கடைசிவரை பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் பங்களாதேஷ் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2 - 0 என கைப்பற்றியது.

இதனை அடுத்து ஐசிசியினால் வெளியிடப்பட்டுள்ள அங்குரார்ப்பண உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து முதல் இடத்தைப் பெற்றது.

இந்த வருட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டி பிரதான தகுதிகாண் சுற்றாக விளையாடப்பட்டு வந்தது.

இந்த லீக் சுற்று முடிவில் அணிகள் நிலையில் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகள் இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற வேண்டுமானால் பங்களாதேஷை 3 - 0 என முழுமையான வெற்றி கொள்வது அவசியம் என்பதை அயர்லாந்து அறிந்த நிலையிலேயே அத் தொடரை எதிர்கொண்டது.

துரதிர்ஷ்டவசமாக அயர்லாந்துக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான முதலாவது போட்டி சிரற்ற காலநிலையால் கைவிடப்பட்டது. இதனை அடுத்து உலகக் கிண்ணத்தில் நேரடியாகப் பங்குபற்றும் வாய்ப்பை அயர்லாந்து இழந்ததுடன் தென் ஆபிரிக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

2020 - 2023 பருவகாலத்திற்கான ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் இங்கிலாந்துடனான போட்டியுடன் சௌத்ஹாம்ப்டனில் 2020 ஜூலை 30ஆம் திகதி ஆரம்பித்துவைத்த அயர்லாந்து, கடைசியாக ஞாயிறன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியுடன் முடித்து வைத்தது.

இந்தக் காலப்பகுதியில் 24 போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து 16 வெற்றிகள், 5 தோல்விகள், 3 முடிவற்றவை என்ற பேறுபேறுகளுடன் 175 புள்ளிகளைப் பெற்று  முதலாம் இடத்தைப் பெற்றது.

நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து 15 வெற்றிகள், 8 தோல்விகள், ஒரு முடிவில்லை என்ற பெறுபேறுகளுடன் 155 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பங்களாதேஷும் இதே பெறுகளுடன் 155 புள்ளிகளைப் பெற்ற போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 3ஆம் இடத்தைப் பெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகியன அடுத்த 5 இடங்களைப் பெற்றதுடன் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகள் இந்தியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபற்ற தகுதிபெற்றன.

9ஆம் இடத்திலிருந்து 13ஆம் இடம்வரை பெற்ற மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, அயர்லாந்து, ஸிம்பாப்வே, நெதர்லாந்து ஆகியவற்றுடன் நேபாளம், ஓமான், ஸ்கொட்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 5 அணிகள் ஸிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளன.

நேபாளம், ஓமான், ஸ்கொட்லாந்து ஆகிய 3 நாடுகள் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் 2 இலிருந்தும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன கிரிக்கெட் உலகக் கிண்ண ப்ளே ஓவ் சுற்றிலிருந்தும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு தெரிவாகின.

தகுதிகாண் சுற்று நிறைவில் முதல் இடங்களைப் பெறும் 2 அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று ஸிம்பாப்வேயில் ஜூன் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் அணிகளின் இறுதி நிலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56
news-image

இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ராகுல்,...

2024-09-10 14:11:46