பசறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மீதும்பிட்டிய மேமலைக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீதும்பிட்டிய நகரிலிருந்து மேமலைக்கு செல்லும் வழியில் நீர் விநியோகத்திற்கான குழாய்கள் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
அவ்வீதியில் காண்கள் வெட்டப்பட்டு, கல்வெடிகள் வைத்து வேலைகள் இடம்பெற்று வருவதால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவ்வீதியினூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை செல்லும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறியும் அவ்வழியே பயணிக்க முடியாதுள்ளது.
இவ்வீதியில் நீர் விநியோக குழாய்கள் பொருத்தப்பட்டப் பின்னரும் குறித்த காண்கள் மூடப்படாமல் வீதி சீரற்ற நிலையில் காணப்படுமோ என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஆகவே, இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று திங்கட்கிழமை (15) கொழுந்து பறிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM