ஹாலிஎல பகுதியில் பாவனைக்கு உதவாத பழுதடைந்த 300 கிலோகிராம் கருவாடு கைப்பற்றப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல நகர் பகுதி மற்றும் சந்தைகளில் பாவனைக்கு உதவாத கருவாட்டினை விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, குறித்த களஞ்சியசாலையை பரிசோதித்த ஹாலிஎல சுகாதார அதிகாரிகள் பாவனைக்கு உதவாத 300 கிலோகிராமிற்கும் அதிகமான கருவாட்டினை மீட்டுள்ளனர். அத்தோடு, லொறி ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
வியாபாரியான சந்தேக நபரை நாளை செவ்வாய்க்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், களஞ்சியசாலை சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆர்.எம்.பீ.பீ.விஜேசோம மற்றும் பிரசாத் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM