பேலியகொடை போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்குச் சொந்தமான வங்கி ஏரிஎம் அட்டையைத் திருடி 22,000 ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், தனது சகாவான பொலிஸ் கான்ஸ்டபிளின் வங்கி ஏரிஎம் அட்டையை திருடி 22,000 ரூபாவை மீளப் பெற்றுள்ளதுடன் அதே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளின் 3,800 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் திருடியுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பேலியகொட மாவட்ட போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிய வந்துள்ளது.
ஏரிஎம் அட்டை வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் விசாரணைகளை மேற்கொண்டு இந்த கான்ஸ்டபிளை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM