நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தன.
இதனை அடுத்து விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ் குழு இவ்வாறு காணாமல் போன துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதுடன் திருட்டு சந்தேக நபர் மற்றும் திருடப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்தவர்களையும் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நடவடிக்கையின் போது நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் தலைமையிலான சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குணரட்ன ,விசேட புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் , குழுவினர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கைதான 24 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உட்பட திருடப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM