தெய்வக்குற்றம் உள்ளதா? கண்டறிந்து களைவது எப்படி?

Published By: Nanthini

15 May, 2023 | 11:47 AM
image

கால நேரம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், எடுக்கின்ற காரியங்கள் எவையும் கைகூடவில்லை, எல்லாம் தடைப்பட்டுப் போகின்றன என அதிகமானோர் சளித்துக்கொள்கின்றனர். சிலரது வாழ்வில்  திருமணம், குழந்தை பிறப்பு, முன்னேற்றம் என்பன நடக்காமலேயே கூட போகின்றன. எதனால் இவ்வாறு நடக்கிறது, எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்றெல்லாம் குமுறுபவர்களுக்கே இந்த பதிவு.

குலதெய்வ சாபம் அல்லது மோசமான கர்மத்தினால் ஏற்பட்ட சாபங்கள் என்பனவற்றால் காரியத் தடைகள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, கருக்கலைப்பு செய்வது, பெண்குழந்தைகளை கொல்வது, கன்னிப் பெண்களின் வாழ்வை சீரழிப்பது, துரோகம் இழைப்பது, பாலூட்டும் பசுவையும் கன்றையும் பிரிப்பது போன்றவை மிக மோசமான சாபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

பிறருக்கு இழைக்கக்கூடிய மிக மோசமான துன்பங்கள் அனைத்துமே சாபமாக மாறக்கூடிய நிலை உள்ளது என ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. 

இவ்வாறான கர்மங்களை நாம் கொண்டிருக்கிறோமா, இல்லையா என்பதை ஜாதகத்தை வைத்து அறிந்துகொள்ள முடியும் என்கின்றனர், ஜோதிடர்கள். 

ஞானகாரகனான கேது பகவானுடன் சனி இணைந்திருத்தல், கேது இருக்கும் வீட்டில் இருந்து 5 மற்றும் 7ஆம் இடங்களில் சனி இருத்தல் என்பவை இவ்வாறான சாபத்தை குறிக்கும் அமைப்பாகும். 

உதாரணமாக, ஒருவருக்கு மிதுன ராசியில் கேதுவும் சனியும் இணைந்திருத்தல், மிதுனத்தில் கேது இருக்க அங்கிருந்து 5ஆம் வீடான துலாம் ராசியில் சனி இருத்தல் அல்லது 7ஆம் வீடான தனுசில் சனி இருத்தல் போன்ற அமைப்புகளை குறிப்பிடலாம்.

இவ்வாறான அமைப்பினை கொண்டவர்கள் தமது வீடுகளில் நல்ல காரியங்களை முன்னெடுக்கும் முன்னர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இது தவிர சக்தி வழிபாட்டையும், மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரி தினத்தில் விரதம் நோற்று சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். சிவ நாமத்தை அல்லது இஷ்ட தெய்வ நாமத்தை ஒரு கிரமமாக ஸ்மரித்து வருவது மிகச் சிறந்த நிவாரணத்தை தரும்.

இந்த வழிபாடுகளை மேற்கொண்டு வரும் பட்சத்தில் படிப்படியாக காரிய தடைகள் நீங்குவதை காண முடியும்.

தொகுப்பு: எஸ். ரொஷாந்தினி

(ஜோதிட மூல நூல்கள், ஜோதிடர்கள் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலான தொகுப்பு)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் கிடைக்க...

2023-05-31 12:49:27
news-image

கரசை கரணத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

2023-05-30 11:57:42
news-image

12 ராசிகளில் எந்த ராசிக்காரர் அதிகம்...

2023-05-27 11:40:57
news-image

நீங்கள் பிறந்த கிழமைக்கான பலன்கள்..?

2023-05-26 12:46:01
news-image

சாபங்களுக்கு பரிகாரங்கள் இருக்கிறதா..?

2023-05-24 15:01:26
news-image

உங்களது பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மயிலிறகு!

2023-05-23 13:33:51
news-image

கர்ம நட்சத்திரங்கள் எது ? இதற்கான...

2023-05-22 13:10:39
news-image

குரு பகவான் பயோடேட்டா

2023-05-20 14:01:08
news-image

கடன் தொல்லையிலிருந்து மீள தேங்காய் +...

2023-05-16 15:33:52
news-image

கஷ்டங்களை அகற்றும் 'தூங்கா விளக்கு' பரிகாரம்

2023-05-16 11:06:51
news-image

எந்தெந்த ராசியினருடன் சேர்ந்தால் அதிர்ஷ்டம் கிட்டும்?

2023-05-15 16:56:34
news-image

தெய்வக்குற்றம் உள்ளதா? கண்டறிந்து களைவது எப்படி?

2023-05-15 11:47:23