2036 பேர்லின் ஒலிம்பிக் குறித்து கற்பனை செய்யலாம்: ஜேர்மன் விளையாட்டுத்துறை அமைச்சர்

Published By: Sethu

15 May, 2023 | 12:06 PM
image

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்­டி­களை ஜேர்­ம­னியின் பேர்லின் நடத்­து­வது குறித்து கற்­பனை செய்ய முடியும் என அந்­நாட்டின் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரி­வித்­துள்ளார். '1936 பேர்லின்' ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெற்று 100 வரு­டங்கள் பூர்த்­தி­யாகும் வேளையில் மீண்டும் அங்கு கோடைக்­கால ஒலிம்பிக் போட்­டி­களை நடத்­து­வது குறித்து ஆரா­யப்­ப­டு­கி­றது.

1936 ஆம் ஆண்டின் கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா பேர்லின் நகரில் நடை­பெற்­றது.

அவ்­வ­ருட குளிர்­கால ஒலிம்பிக் விழாவும் ஜேர்­ம­னியின்; ஜேர்மிஷ் பார்­டேன்­கேர்சென் நகரில் நடை­பெற்­றன. சர்­வா­தி­காரி அடோல்வ் ஹிட்லர் தலை­மை­யி­லான ஆட்­சிக்­கா­லத்தில் அப்­போட்­டிகள் நடை­பெற்­றன.

இந்­நி­லையில் அமைச்சர் நான்சி ஃபேசர் அளித்த செவ்­வி­யொன்றில், '1936ஆம் ஆண்­ டின் போட்­டிகள் பயங்­க­ர­மா­னவை. அப்­போட்­டி­களை தமது ஆட்­சிக்­கான பிரச்­சா­ரங்­க­ளுக்­காக நாஸிகள் ஏற்­பாடு செய்­தனர். 

அப்­போட்­டிகள் நடை­பெற்ற இடத்­தி­லேயே விசேட வழியில் மீண்டும் ‍போட்டிக‍ளை நடத்­து­வது குறித்து கற்­பனை செய்ய முடியும். 1936 ஆம் ஆண்டின் போட்­டி­களின் தன்மையை எடுத்­துக்­காட்­டு­வ­தற்கும் உலகில் மனித உரி­மை­களை ஊக்­கு­விப்­ப­தற்கும் ஜேர்­மனி அதிக வேலை­களை செய்ய வேண்­டி­யி­ருக்­கும'; என்றார்.

இப்­போட்­டி­களை நடத்­து­வ­தற்கு விண்­ணப்­பிப்­பதை தான் வெகு­வாக ஊக்­கு­விப்­ப­தாக அவர் கூறினார்.

2022 உல­கக்­ கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளின்­போது, வர­வேற்பு நாடான கத்­தாரின் மனித உரி­மைகள் நிலை­வ­ரத்தை ஜேர்­மனி கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தது.

1936 ஆம் ஆண்டின் பின்னர் 1972 ஆம் ஆண்டின் கோடைக்­கால ஒலிம்பிக் போட்­டி­களை ஜேர்­மனி நடத்­தி­யி­ருந்­தது.

எதிர்­வரும் கோடைக் கால ஒலிம்பிக் போட்­டிகள் 2024ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளன. 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலும் 2032 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்­பேன் நகரிலும் ஒலிம்பிக் போட்டி­கள் நடைபெறவுள்ளமை குறிப்­பிடத்­தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும்...

2025-12-17 17:21:39
news-image

பொண்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி...

2025-12-17 17:19:28
news-image

எதிர்கால மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை...

2025-12-17 15:11:02
news-image

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்...

2025-12-17 01:20:12
news-image

இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை...

2025-12-17 01:15:02
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை...

2025-12-17 01:10:43
news-image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை...

2025-12-16 19:07:35
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான...

2025-12-16 17:02:39
news-image

ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார்...

2025-12-16 14:42:13
news-image

ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின்...

2025-12-16 14:05:45
news-image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ்....

2025-12-16 09:52:29
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: நேபாளத்தை...

2025-12-16 03:17:32