பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய 42 வயதுடைய பெண் ஒருவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வீட்டுப் பணிப் பெண்ணினால் தங்க மோதிரம் ஒன்று திருடப்பட்டுள்ளதாக சுதர்மா நெத்திகுமார முறைப்பாடு செய்ததுடன், சந்தேக நபர் வெலிக்கடை பொலிஸாரிடம் மே 11 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பதுளையைச் சேர்ந்த குறித்த பெண், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து தனக்கு வலி ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், உரிமையாளர்கள் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, குறித்த பெண் சுவாசிக்க சிரமப்பட்டதால் அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மறுநாள் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM