மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்

Published By: Nanthini

14 May, 2023 | 05:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலம் தாழிறங்கல், கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் ஆகிய தன்மைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

அத்துடன் கடற்கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் அவ்வப்போது 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது  தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், மறு அறிவித்தல் விடுக்கும் வரை வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19