கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சலசலப்பு.!

Published By: Robert

18 Jan, 2017 | 01:36 PM
image

கிளிநொச்சியில் நேற்று விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடக்கு மாகாண விவசாய அமைச்சரும், பதில் முதலமைச்சருமான பொ.ஜங்கரநேசன் பாராளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

தற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக எதிர்வரும் மாதங்களில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் என்பதனால் வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு வறட்சியினால் ஏற்படும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அதனை எதிர்க்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடா்பில் அறிக்கை ஒன்றை அனுப்புவதற்காகவும் விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

இதன்போது மாவட்டத்தின் வறுமை தொடா்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரத் தரவுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை 12.8 வீதம் எனவும், 5 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தில் கிளிநொச்சி இலங்கையில் 25 ஆவது இடத்தில் இருக்கிறது எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்தக் கணிப்பீடுகள் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த மாவட்ட புள்ளிவிபரவியலாளர் பி.பாலச்சந்திரன்,

இங்கு காட்டப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பழையது, அது 2012 ஆம் ஆண்டிக்குரிய தகவல்கள், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை, 2016 ஆண்டின் தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை வீதம் 20.8 வீதமாக காணப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதேச செயலக பிரிவுகளின் படி கரைச்சியில் 20.36 வீதமும், பச்சிலைப்பள்ளியில் 18.64 வீதமும், பூநகரியில் 22.71 வீதமும், கண்டாவளையில் 21.13 என வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வீதம் காணப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33