சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்தவர் கைது; 263 சீனிப்பாணி போத்தல்கள் மீட்பு! - வவுனியாவில் சம்பவம்

Published By: Nanthini

14 May, 2023 | 02:13 PM
image

வுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபர் சனிக்கிழமை (13) காலை கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து  சீனிப்பாணி நிரப்பப்பட்ட 263 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தேன் என சீனிப்பாணியை விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று காலை வேப்பங்குளம் 8ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றிவளைத்துள்ளனர்.

அதனையடுத்து, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதோடு, அந்த வீட்டில் விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி (750 மில்லி லீற்றர்) மற்றும் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சில பொருட்களை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில், சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07