பங்களாதேசின் மிகப்பெரிய அகதிகள் முகாமை அடுத்த சில மணிநேரங்களில் பாரிய சூறாவளி தாக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
பங்களாதேசில் அரைமில்லியனிற்கும் அதிகமாக அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள கொக்ஸ் பசார் அகதிகள் முகாமை மோக்கா சூறாவளி தாக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ள அதிகாரிகள் அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அகதிமுகாமை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே மழை காணப்படுகின்றது.
இரண்டு தசாப்த காலத்தில் பங்களாதேஸ் எதிர்கொண்ட மிக மோசமான சூறாவளியாக இது காணப்படலாம்.
சூறாவளி பங்களாதேஸ் மியன்மார் எல்லையை நோக்கி நகர்வதை தொடர்ந்து பல விமானநிலையங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்,மீனவர்கள் கடலிற்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்,பாதுகாப்பான இடங்களிற்கு மாற்றப்படும் மக்களிற்காக 1500 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் இந்த இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள தயார் ஒரு உயிரிழப்பை கூட நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என விபுசன் காந்திதாஸ் என்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.
சூறாவளியால் பாதிக்கப்படக்கூடியவர்களிற்கான முகாம்களிற்கு மக்கள் வந்தவண்ணமுள்ளனர் கொக்ஸ் பசாரில் உள்ள பாடசாலைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிலர் உடமைகளுடனும் சிலர் தங்கள் கால்நடைகளுடனும் தற்காலிக தங்குமிடங்களிற்கு சென்றுள்ளனர்.
17 வயது ஜனெட் தனது இரண்டு மாதகுழந்தையுடனும் சில ஆடைகளுடனும் தற்காலிக தங்குமிடத்திற்கு சென்றுள்ளார்.
அவரது கணவர் இன்னமும் கொக்ஸ் பசார் பகுதியிலேயே இருக்கின்றார்.
கடந்த வருடம் சித்திராங் பூகம்பத்தினால் தனது வீடு பாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
அடுத்து என்ன நடக்கும் என நான் அச்சம் கொண்டுள்ளேன் எனது வீடு நீரில் மூழ்கிவிடும் என அஞ்சுகின்றேன் என அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
மியன்மாரிலிருந்து தப்பிவெளியேறியுள்ள ஒருமில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் பங்களாதேஸில் மிக மோசமான நிலையில் உயிர்வாழ்ந்துவருகின்றனர்.
பங்களாதேஸ் அரசாங்கம் அவர்கள் முகாம்களை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியை வழங்க மறுக்கின்றது.
bbc
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM